திங்கள், அக்டோபர் 17, 2011

நியூயார்க் மேயரின் மனித நேயச் செயல்.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

நியூயார்க் மேயரின் மனித நேயச் செயல்.


தாடியுடன் சவரம் செய்யப்படாத முகம் 43 வயது மதிக்கத்தக்க அஹமது செரீப் என்ற பங்களா தேஷைச் சேர்ந்த டாக்ஸி ட்ரைவர் தனது குடும்பத்துடன் நியூ யார்க் நகரில் வசித்து வருகிறார். கடந்த செவ்வாய்கிழமை 24-8-2010 அன்று மைக்கேல் என்ட்ரிட் என்ற 21 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவர் அவரது டாக்ஸியை கை காட்டி நிருத்தி ஏறினார்.

டாக்ஸி சிறிது தூரம் சென்;றதும் பின் சீட்டில் அமர்ந்திருந்த மைக்கேல் என்ட்ரிட்  ட்ரைவரை நோக்கி நீ முஸ்லிமா ? என்று கேட்டதும் அவர் ஆம் ! என்று பதில் கூற அமைதியாக இருந்த மைக்கேல் என்ட்ரிட் மீண்டும் அவரிடம் இது ரமளான் மாதம் என்பதால் நோன்பு பிடித்து ரமளான் மாதத்தின் சட்டதிட்டங்களை பின்பற்றுகிறாயா என்று கேட்க ? அவர் ஆம் ! என்று பதில் கூறியதும் கண் இமைக்கும் நேரத்தில் அஹமது ஷெரீபுடைய தோள் புஜம் மற்றும் முகத்தில் ஓங்கிக் குத்துகிறார் மூக்கு உடைந்து ரெத்தம் ஒடத்தொடங்கியதும் அஹமது ஷெரீப் காரை நிருத்துகிறார் அக்கம் பக்கத்தில் நின்றிருந்தவர்கள் அஹமது ஷெரீஃபை ஆஸ்பத்திரியல் சேர்த்து விட்டு மைக்கேல் என்ட்ரிட்டை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

தகவலறிந்த  நியூ யார்க் சிட்டி மேயர் எம்.ப்ளும்பர்க் அவர்கள் அஹமது ஷெரீபை தன்னை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார். சிகிச்சை முடிந்ததும் நியூ யார்க் சிட்டி மேயர் அவர்களின் அழைப்பை ஏற்று அவரது இல்லத்திற்கு அஹமது ஷெரீஃப் தனது குடும்பத்துடன் சென்று சந்தித்தார்.

அஹமது ஷெரீஃப் குடும்பத்தினரை வரவேற்று அன்புடன் உபசரித்த மேயர் எம். ப்ளும்பர்க் அவர்கள் இந்த நகரம் இத்தனை அழகாக இருப்பதில் பெருமை இல்லை மாறாக இந்த நகரத்திற்கு எல்லா மதத்து மக்களும் எல்லா நிறத்து மக்களும் எல்லா மொழி பேசக்கூடிய மக்களும் இந்த நகரத்தில் அமைதியுடனும்> பாதுகாப்புடனும் வாழவேண்டும் அதுவே இந்த நகருக்குப் பெருமை என்றுக்கூறி நடந்து விட்ட சம்பவத்திற்காக தனது வருத்தத்தை தெரிவித்துவிட்டு இந்த வெறுக்கத்தக்க செயலை கண்டிப்பதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்படுத்தினார்.

வேல்டு ட்ரேடு சென்டர் தாக்குதல் நடந்த இடத்தில் குறைந்தது மூவாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதால் அந்த இடத்தின் அருகே மிகப்பெரிய இஸ்லாமிக் சென்டர் அமைக்கப்படுவதை பரவலாக மக்கள் எதிர்ப்பதால்; அதன் பிரதிபலிப்பாக இது இருக்கலாம் என்றுக்கருதுவதாக பத்திரிகையாளர்கள் அஹமது ஷெரீஃபிடம் தெரிவித்தனர்.

அதற்கு அஹமது ஷெரீஃப் நான் அவ்வாறு கருதவில்லை காரணம் என்னை தாக்கியவர் வேல்டு ட்ரேடு சென்டர் தாக்குதல் நடந்த இடத்தில் இஸ்லாமிக் சென்டர் அமையவிருப்பது சம்மந்தமாக எதையும்  என்னிடம் பேசவில்லை மொத்தத்தில் அவர் என் மார்க்கத்தை வெறுப்பவராகவே அவரை காண்கிறேன் என்று பதில் அளித்தார்.

21 வயது மைக்கேல் என்ட்ரிட் கல்லூரி மாணவன் என்றும்> அஹமது ஷெரீஃபை தாக்கும் பொழுது போதையில் இருந்ததாகவும் சமீபத்தில் தான் ஆப்கானிஸ்தான் சென்று வந்ததாகவும் அவனை கைது செய்து வழக்குப் பதிந்த போலீஸார் கூறுகின்றனர்.

 
நீயூ யார்க் நகரில் மொத்தம் 8 மில்லியன் முஸ்லீம்கள் வசிக்கின்றனர் இது அங்குள்ள மக்கள் தொகையில் 10 சதவிகிதமாகும் 100 பள்ளிவாசல்கள் இருக்கின்றன  டாக்ஸி ட்ரைவர்களில் 50 சதவிகிதம் முஸ்லிம்கள் ஆவார்கள். 

இந்த சம்பவத்திற்குப் பிறகு நியூ யார்க் நகரில் வாழும் முஸ்லீம்கள் அச்சத்துடனும்> பீதியுடனும் இருக்கின்றனர் குறிப்பாக புர்கா அணிந்து வெளியில் செல்லும் பெண்கள் அதிக அச்சத்துடன் காணப்படுகின்றனர்.

இது மாதிரியான சம்பவங்கள் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் அவ்வப்பொழுது நடந்து கொண்டிருந்தாலும் இதை ஒருப்பொருட்டாக அதிகபட்சம் நாடுகளில் கண்டுகொள்வதில்லை காரணம் இது பெரும்பான்மை மக்களின் கோபம் என்று சப்பைகட்டுக் கட்டி வழக்கை குப்பைக்குத் தள்ளிவிடுவர். நீயூ யார்க் சிட்டி மேயர் அவர்களால் கூட்டப்பட்ட பத்திரிகையாளர்களும் கூட இதே தொணியில் இந்த சம்பவத்தை வேல்டு ட்ரேடு சென்டர் தாக்குதலுடன் இணைத்துப் பேசியது உதாரணமாகும்.  

நியூ யார்க் சிட்டி மேயர் மைக்கேல் ப்ளும்பர்க் அவர்கள் இதில் நேர்மையாகவும்> மனிதாபிமானத்துடன்  நடந்து கொண்ட காரணத்தால் குற்றவாளிக்கு கொலைவெறித் தாக்குதல்> மத எதிர்ப்புப் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிந்து நடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நாட்டின் கௌரவம் காக்கப்பட்டது.

ஒவ்வொரு நாடுகளிலும் நியூ யார்க் சிட்டி மேயர் மைக்கேல் ப்ளும்பர்க் அவர்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் ஒரு ஆளாவது இருந்தாலும் கூட மதவெறி> மொழிவெறி> இனவெறிப் பிடித்த தீவிரவாதிகளின் கொட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும்.

உணர்வுக்கு எழுதியக் கட்டுரை


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

மணிகன்டனின் மனித நேயச் செயல்.


ஏகஇறைவனின் திருப்பெரால்...

நெஞ்சை நெகிழச் செய்த மணிகன்டனின் மனித நேயச் செயல்.
 
சவூதி அரேபியா ரியாத் மாநகரில் தனியார் கார்கோ நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார் தமிழ்நாட்டைச்சேர்ந்த மனிகண்டன்.

அவர் தன் வேலையை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரப்பர்பேண்டால் கட்டப்பட்ட நிலையில் ஒரு பணக்கட்டு ஒன்று தரையில் கிடப்பதை கண்டார்.

அதை எடுத்து பார்த்த அவர் ஒருகணம் திகைத்து போனார். அத்தனையும் 500 ரியால் நோட்டுகளால் ஆன 50.000 ரியால்.

அதில் இருந்தது (இந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய்) தன் மனசாட்சி உறுத்தவே அருகிலிருந்த ஃபாஸ்ட்புட் கடையை அனுகி அக்கடை முதலாளியான கேரளாவைச்சேர்ந்த ஹம்ஜா என்பவரிடம் , இப்பணம் தாங்கள் கடையின் வாடிக்கையாளர் யாராவது ஒருவர் தான் தவற விட்டிருக்கவேண்டும் அப்படி யாராவது வந்து கேட்டால் அவரிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.

மனிகண்டன் கூறியதைப்போலவே 15 நிமிடம் கழித்து சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவர் பதைபதைப்புடன் வந்து, தன் பணம் காணாமல் போனதை கூறினார். அவரிடமிருந்த அடையாள அட்டை, ஏ.டி.எம். கார்டு போன்ற ஆதாரங்களின் அடிப்படையில் பணம் அவருடையது தான் என்பதை உறுதி செய்தபின் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மனிகண்டனின் மனிதநேய செயலை அனைவரும் பாராட்டினர்.
இச்செய்தி மலையாள பத்திரிக்கையான கல்ஃப் மாத்யமம் ல் வெளிவந்துள்ளது.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்